கஜா புயலையொட்டி பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்களை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது

கும்பகோணம், நவ. 14: கஜா புயலையொட்டி ெபாதுமக்களிடம் இருந்து வரும் தகவல்களை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் விரைந்து செயல்பட வேண்டுமென தஞ்சையில் நடந்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் கஜா புயல் குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், கஜா புயல் உருவாகியுள்ளதால் இன்று மாலை முதல் நாளை மறுநாள்  வரை பலமாக காற்று வீசும், மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் உடனடியாக செய்துதர வேண்டும். சாலையோரங்களில் உள்ள அனைத்து விளம்பர பதாதைகளையும் அகற்ற வேண்டும். எந்த நேயாளிகளையும் கஜா புயல் போகும் வரை டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது.

பெட்ரோல், டீசல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட அத்யாவதிய தேவைகளை தேவையானதை விட அதிகமாக வருவாய்த்துறையினர் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். சாலையோரங்களில் பட்டுப்போன மரங்கள் விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால்களில் தண்ணீர் செல்லுமாறு அமைத்து கொள்ள வேண்டும். வட்ட அளவில் ஆர்ஐ அலுவலர் தலைமையில் குழு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்ய வேண்டும்.

அனைத்து பணிகளுக்கும் பணம் இல்லையென கூறக்கூடாது. பொது நிதியிலிருந்து கஜா புயல் செலவு என்று எழுதி பணிகளை செய்து கொள்ள வேண்டும். அலுவலர்கள் யாராவது செய்யாத பணிக்கு செலவு தொகை காட்டி பணத்தை எடுத்தால் மாட்டி கொள்வார்கள். பொதுமக்களிடமிருந்து வரும் எந்த தகவலையும் அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் யாராவது செல்போனை ஆப் செய்து விட்டு வீட்டில் இருந்தால், போலீசார் மற்றும் தாசில்தாரை கொண்டு இரவு 2 மணியானாலும் அவர்களின் வீட்டின் கதவை தட்டி எழுப்பி பணிக்கு அழைத்து வருவேன்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களிலும் ஜெனரேட்டர் தயார் நிலையில் டீசல் நிரப்பி வைத்து கொள்ள வேண்டும். ஜென்ரேட்டர் இல்லாதவர்கள் புதிதாக அல்லது வாடகை தாரர்களிடம் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அத்யாவசிய தேவையான பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பாபநாச வட்டாரத்தில் 19 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்க தயார் நிலையில் ஏற்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் செல்போன் பயன்பாடு கிடைக்காத பட்சத்தில் போலீசாரிடம் உள்ள வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்  மந்திராசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, ஏடிஎஸ்பி சிவசேகரன்,  நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னேற்பாடு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவு22 புயல் பாதுகாப்பு குழு அமைப்புகலெக்டர் அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் உள்ள  9 வட்டங்களில் 22 புயல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருப்பர்.  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும்போது அரசு துறையினர் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  அவசர தேவைக்கு 24 மணி நேரம் இயங்கும் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை கூறலாம். கஜா புயலால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார்.

கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது கிராமங்களில் வாரம்தோறும் போடப்படும் காய்கறி சந்தை, சர்க்கஸ், கண்காட்சி மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள்  நடத்த அனுமதி வழங்கக்கூடாது. பேருந்து டிரைவர்களின் செல்போன் நம்பர்களை  அதிகாரிகள் வாங்கி வைத்து கொண்டு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக  தகவல் கொடுக்க வேண்டும். மேலும் அனைத்து குழுவினரும் மரம் அறுக்கும்  இயந்திரம், லாரி, ஜீப் 5 பேர் கொண்ட குழுக்களை இரவு பகல் நேரங்களில் தயாராக  வைத்து கொள்ள வேண்டும். அந்த குழுவினரிடம் மரம் அறுக்கும் இயந்திரம்  உள்ளதா என்பதை எனது வாட்ஸ்ஆப் நம்பரில் பதிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: