×

துணை சபாநாயகர் தம்பிதுரை,அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வெற்றி விநாயகா பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கரூர், நவ. 14: கொடைக்கானலில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொடைக்கானல் ஆங்கிலோடு இருதய கல்லூரியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் செண்பகனூரில் மூன்று நாட்களாக நடைபெற்றது.மூன்று நாட்கள் நடந்த இந்த முகாமில் அந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தாவரவியல் பூங்கா, அருங்காட்சியக விலங்குகள் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள லைக்கன்கள் அப்பகுதியின் சுத்தமான காற்றை உணர்த்துவது என்பதையும், குரங்குவால் பைன் மரங்களின் வளர்ச்சி அந்த பகுதியில் சுத்தமாக நீர்போக்கு இருப்பதை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இரண்டாவது நாளில் மலையேற்ற பயிற்சி நடத்தப்பட்டது. கொடைக்கால் பகுதியில் இருந்து மேல் பழனிமலைக்கு நடைபயிற்சியாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்றாம் நாளில் கீழ் பழனி மலையின் பெருமாள் மலை, வெள்ளி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.இறுதியாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், நகர மயமாக்கலினாலும், காடுகளின் அளவு, மரங்களின் எண்ணிக்கை ஆகியவை எவ்வாறு குறைந்து வருகிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் முதுகலை ஆசிரியைகள் சுபத்ரா, தமயந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தாளாளர் ஆர்த்தி சாமிநாதன், ஆலோசகர் பழனியப்பன், முதல்வர் பிரகாசம் ஆகியோர் பாராட்டினர்.



Tags : Thambidurai ,Wijaya Bhaskar ,welfare camp ,Kodaikanal ,
× RELATED ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள்...