×

கரூரில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டம்: 22 பேர் கைது

கரூர், நவ. 14: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தப்படி ரூ.380 கூலி வழங்கிட வேண்டும். போனஸ், சிட் இம்பாரஸ்ட்கேட் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளை சார்பில் நேற்று கரூர் கோவை சாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை செயலாளர் தனபால், மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, பொருளாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.


Tags : Power Strike Central ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...