×

பசுபதிபாளையம் ரயில்ேவ பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், நவ. 14 : பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுகிறதுகரூர் பசுபதிபாளையத்தில் உள்ள ரயில்வே பாலத்தின்கீழ் புறத்தில் அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும்போது இந்த வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்படும். அமராவதி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வாய்க்காலில் கழிவுநீரும், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் குப்பைகளும் மண்டிக்கிடக்கிறது. வாய்க்கால் அமராவதி ஆற்றுப்பாசன பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் வாய்க்காலில் வீசப்படுகிறது. யார் அதனை அகற்றுவது என அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கைகாட்டி விடுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களையும் கேரிபேக்குகளையும் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் விற்பனையும், உணவகம் மற்றும் பிற இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பக்கத்து மாவட்ட தலைநகரங்களில் கூட பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கரூரில் இனிப்பகம் நடத்தும் தனியார் நிறுவனம் கூட பிளாஸ்டிக் கேரி பேக்கை பயன்படுத்துவதில்லை. ஆனால் கரூரில் செயல்படும் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் தடையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : railway bridge ,Pasuppathapalayam ,
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...