சாலைகளும் படுமோசம் சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததால் பிளாஸ்டிக் ஆலைக்கு அபராதம்

ராஜபாளையம், நவ. 14: ராஜபாளையம் நகரில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள 20, 21, 27, 28வது வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் சரவணன், பொறியாளர் நடராஜன், மாவட்ட குடிமைப்பொருள் அலுவலர் வசந்த ராஜன் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் அழகை நகர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலையில் சுற்றுப்புறங்கள் தூய்மையாக இல்லை என 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் பிஏசிஆர் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டதால், அந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் பகுதியில், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: