பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 14: பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாதாந்திர மருத்துவப்படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெற 20 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் தங்கவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: