×

உலக சர்க்கரை தின மருத்துவ முகாம்

வத்தலக்குண்டு, நவ. 14:  கொடைக்கானலில் சக்தி கிளினிக், சக்தி டயபடிஸ் பவுண்டேசன் சார்பில் உலக சர்க்கரை தின மருத்துவ முகாம் நடந்தது. வத்தலக்குண்டு சக்தி கிளினிக் மற்றும் சக்தி டயபடிஸ் பவுண்டேசன் இணைந்து இலவச மருத்துவ முகாம், விழிப்புணர்வு கண்காட்சி கொடைக்கானலில் நடந்தது. சக்தி கிளினிக்  டாக்டர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முகாமில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உப்பு அளவு, 5 வகையான கொழுப்பின் அளவு கண்டறிதல், மற்றும் 19 வகையான சோதனைகள், ரத்த சோகை கண்டறிதல், இருதய சுருள் படம் எக்கோ ஸ்கேன் பார்த்தல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சுவாச கோளாறு பரிசோதனைகள் நடந்தன.

மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், குறைப்பதற்கும் தவிர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதனை 1000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இதில் வத்தலக்குண்டு, கொடைக்கானலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி கிளினிக் மேலாளர் முகமதுசுல்தான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டாக்டர் தெய்வேந்திரன் தலைமையில் சக்திகிளினிக் மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Camp ,World Sugar Day ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு