×

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல், நவ. 14:  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அமல்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு போல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்குவது, ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்கு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சின்னச்சாமி, செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட இணைசெயலாளர் பாப்பாத்தி,  துணைதலைவர் சுந்தரபாண்டி, வெள்ளைச்சாமி, போக்குவரத்து துறை முத்து, கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். பொருளாளர் கந்தசாமி நன்றி கூறினார். இதேபோல் திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாடடம் நடத்தினர்.

Tags : sector pensioners ,
× RELATED தென்காசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி...