பாலசமுத்திரத்தில் தெருநாய்களிடம் தினந்தோறும் கடி மக்கள் பீதி

பழநி, நவ. 14:  பாலசமுத்திரத்தில் தெருநாய்களிடம் தினந்தோறும் கடிவாங்கி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பெருமாள் கோயில் தெரு, புதச்சு விநாயகர் கோயில் தெரு, செட்டியார் தெரு மக்கள் நாய்களால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கூறியதாவது, பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியவில்லை. குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. நடக்க முடியாத மூதாட்டிகளும் நாய்க்கடிக்கு அதிகளவு ஆளாகின்றனர். இதனால் இரவுநேரங்களில் வெளியில் செல்லவே பயமாக உள்ளது. பேரூராட்சிக்கு தேர்தல் நடத்தப்படாததால் கவுன்சிலர்களிடமும் முறையிட முடியவில்லை. நாளுக்கு நாள் நாய்க்கடியால் மருத்துவமனைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. நேற்று முன்தினம் கூட 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: