கோழியை அடைத்து வளர்க்க தடை விதித்ததால் இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும்

காங்கயம், நவ.14: கோழியை கூண்டிற்குள் அடைத்து வளர்க்க தடை விதித்ததால் இறைச்சிக்கும், முட்டைக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் காங்கயத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கூண்டிற்குள் கோழிகளை அடைத்து வளர்க்க கூடாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால், கோழிப்பண்ணைகளை மூடும் அபாயம்ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மூடப்பட்டால் நாடு முழுவதும் கறிக்கோழி மற்றும்முட்டைகளுக்கு தட்டுப்பாடு வரும். இது பேராபத்தில் முடியும். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னைமரங்களை வெள்ளை ஈ தாக்கியுள்ளது. வெள்ளை ஈக்கள்  வெளியிடும் எச்சம் தென்னைமட்டை இலைகளில் கருப்பு நிறத்தில் பரவி விடுவதால் ஓரினச்சேர்க்கை வெகுவாக குறைந்து போய் விடுகிறது. இதனால், சாரை தொடர்ந்து ஈக்கள் உறிஞ்சி வருவதால் விளைச்சல் சரிபாதியாக குறைந்து  விடுகிறது. இந்த இக்கட்டான நிலையில் தேங்காய் விலையும்  சரிந்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, தென்னை வாரியமும், வேளாண் துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வெள்ளை ஈக்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: