திருப்பூர் முத்து நகரில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

திருப்பூர், நவ.14: திருப்பூர் முத்து நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட ெகாங்கு மெயின் ரோடு, முத்துநகர் சந்து 3வது வீதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள், வாய்க்காலை சுத்தம் செய்யாமல் கழிவுநீரும், குப்பையும் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,`சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகிறது. ‘குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற, பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செவிசாய்க்கவில்லை. இனியும் தாமதம் செய்யாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: