×

பெரியாகவுண்டனூரில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

பொள்ளாச்சி, நவ.14:  பொள்ளாச்சி அருகே பெரியாகவுண்டனூர் கிராமத்தில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கிராம பகுதிகளில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் இறைச்சிக்கழிவு, தோல்கழிவு, மருத்துவக்கழிவு உள்ளிட்டவை கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, இறைச்சிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதில், உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டியிலிருந்து பிரிந்து செல்லும் தாராபுரம் ரோட்டில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இறைச்சிக்கழிவு கொட்டும் செயல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது-.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாகவுண்டனூரில் மூட்டை, மூட்டையாக வாகனங்களில் எடுத்து வந்து இறைச்சிக்கழிவு கொட்டப்பட்டது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள், இறைச்சிக்கழிவால் உண்டாகும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சிலநேரத்தில் கால்நடைகள் அதனை நுகர்வதுடன், சிதறி போடுவதால் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கிறது. தாராபுரம் ரோட்டோரம் ஆங்காங்கே கொட்டப்படும் இறைச்சிக்கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன்.
நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Disease spread ,
× RELATED திருவள்ளூர் நகராட்சியில் சுகாதாரமற்ற...