வருமானவரி விலக்கு கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 14: வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஓய்வூதியர் சங்கம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பிரசன்னா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி பாரதி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  இதில், மத்திய அரசு வழங்கியது போல குறைந்த பட்ச ஓய்வூதியம் 9ஆயிரம் ரூபாய் மற்றும் மருத்துவ படி ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.  ஓய்வூதியர்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: