மஞ்சள் விலை தொடர் சரிவு

கோவை, நவ.14:கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த விற்பனையில் மஞ்சள் விலை குவின்டாலுக்கு ரூ.500 வரை சரிந்தது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள விற்பனை கூடத்தில் திங்கள் மற்றும் வியாழன் தோறும் மஞ்சள் ஏல முறையில் நடக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் நரசிபுரம், பூலுவபட்டி, சென்னனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் விரலி மஞ்சள் 110 குவின்டால், கிழங்கு மஞ்சள் 38 குவின்டால் என 148 குவின்டால் விற்பனையானது.

இதை பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கினர். இதில் விரலி ரகம் மஞ்சள் குவின்டால் சராசரி விலை குவின்டால் ரூ.7,200க்கும், கிழங்கு மஞ்சள் குவின்டால் சராசரி விலை ரூ.6,500க்கும் விற்றது. கடந்த ஏலத்தோடு ஒப்பிடுகையில் விரலி மஞ்சள் குவின்டாலுக்கு ரூ.500 சரிந்துள்ளது. முந்தைய ஏலத்தில் ரூ.600 சரிவடைந்த நிலையில், தற்போதைய ஏலத்திலும் ஏற்பட்ட தொடர் சரிவால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: