×

விதிகளை மீறி இயங்கிய 12 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி

விழுப்புரம், நவ. 14:  விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயங்கிய 12 ஷேர் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு ஷேர் ஆட்டோக்கள் முக்கிய காரணமாக உள்ளது. 2, 3 கி.மீ தூரத்தில் 80 ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஷேர் ஆட்டோக்கள் முறையாக இயங்கவும், அவர்களுக்கென்று நிறுத்துமிடம் தனியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து காவல்துறையினர் ஒழுங்குபடுத்தியுள்ளனர். ஆனால் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கி வருவதாக புகார் எழுந்தது.  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு தாறுமாறாக சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதுமாக உள்ளனர்.

தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் ஷேர் ஆட்டோக்களால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்து அலுவலர்களுக்கு தொடர் புகார்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கூடுதல் பயணிகளை ஏற்றிச்சென்றதாக 6 ஷேர் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அதே போல் நான்குமுனை சந்திப்பில் விதிகளை மீறி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கியதால்
6 ேஷர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயங்கிய 12 ஷேர் ஆட்டோக்களை போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், விழுப்புரம் நகரில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதிப்படி குறிப்பிட்ட பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே ஷேர் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் எச்சரித்தார்.

Tags : Regional Transport Officer ,
× RELATED தகுதி சான்றில்லாத 3 வாகனங்கள் பறிமுதல்