×

ஜிப்மரில் ஆஸ்டமி நாள் விழா

புதுச்சேரி, நவ. 14:  புதுச்சேரி ஜிப்மர் 6-வது ஆஸ்டமி நாள் கடைபிடிக்கப்பட்டது. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலைத்துளை (ஸ்டோமா) உருவாக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட பிறகு, பெருங்குடல் வழியாக மலம், வயிற்று சுவரின் மேற்பகுதியில் வெளியேறுமாறு அமைக்கப்படுகிறது. இதனால் நோயாளிகளும், அவரின் குடும்பத்தினரும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது மனரீதியாகவும், சமூகரீதியாகவும் ஆதரவு தேவைப்படுகிறது.  புதுச்சேரி ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சைத்துறை மற்றும் செவிலியர் துறை சார்பில் 6வது ஆஸ்டமி தினவிழா கொண்டாடப்பட்டது. குடலியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் பிஜு பொட்டாகாட் வரவேற்றார்.

இவ்விழாவை ஜிப்மர் இயக்குனர் விவேகானந்தம் தொடங்கி பேசுகையில், `ஸ்டோமா பராமரிப்பு சேவை ஜிப்மரில் ஸ்டோமா கிளினிக் வழியாக கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக பயிற்சி பெற்ற செவிலியர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அச்செவிலியர்களே சம்பந்தப்பட்ட நோயாளிகளின் தேவைகளையும் அதனை சார்ந்த கல்வியையும், ஆலோசனைகளையும் அளிக்கின்றனர்’ என்றார்.  மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே வாழ்த்தி பேசினார். செவிலியர் மேற்பார்வையாளர் சங்கரீஸ்வரி ஜிப்மரில் வழங்கப்படும் ஸ்டோமா சேவையை பற்றி பேசினார்.  குடல் அறுவை சிகிச்சை பேராசிரியர் செந்தில், வேலூர் சிஎம்எல் ஸ்டோமோ செவிலியர் ஐடா நிர்மல், அப்போலோ ஸ்டோமா செவிலியர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் ஸ்டோமாவின் பல்வேறு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர். ஸ்டோமா செவிலியர் பிரியா கிரேஸ் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags : Ostmy Day Festival ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...