×

மணக்குள விநாயகர் கல்லூரியில் களிமண் சிற்ப வடிவமைப்பு பயிற்சி

புதுச்சேரி, நவ. 14: மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியல் புதுச்சேரி மாநிலத்திலேயே முதன் முறையாக கட்டட கலையியல் (ஆர்க்கிடெக்சர்) துறை கடந்தாண்டு முதல் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்துறையின் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது. மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ., செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மணக்குள விநாயகர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் வரவேற்றார்.

களிமண் சிற்ப (டெரகோட்டா) கலைஞர் வில்லியனூர் முனுசாமி களிமண் சிற்ப வடிவமைப்பு குறித்து விரிவாக விளக்கி மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்தார். முதலாமாண்டு ஆர்க்கிடெக்சர் மாணவ, மாணவிகள் பங்கேற்கு கலை படைப்புகளை உருவாக்க பயிற்சி பெற்றதுடன், அது தொடர்பாக தங்களது சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Tags : Manaku Vinayagar College ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...