புதுவை பல்கலை பேராசிரியைக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது

புதுச்சேரி, நவ. 14:  புதுவை பல்கலைக்கழகம், உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்ற சுபலட்சுமியின் ஆய்வு பணிகளை பாராட்டி, ஹரியானா மாநிலம் மானேஸ்வரில் இயங்கி வரும் தேசிய மூளை ஆராய்ச்சி மையமானது ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதை வழங்கி

கவுரவித்துள்ளது. இவ்விருதை பெற்ற பேராசிரியை சுபலட்சுமி, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 உதவி பேராசிரியை சுபலட்சுமி மூளை நரம்பியல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். தற்போது விழித்திரையில் உள்ள நரம்பியல் குறைபாடுகளால் ஏற்படுகின்ற மனித குருட்டுத்தன்மைக்கான காரணங்கள் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள், செல் சிகிச்சை ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இவரின் அரிய ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் நீரிழிவு நோய் காரணமாக ரெட்டினோபதி பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: