அண்ணன் வீட்டில் தங்கை தீக்குளித்து சாவு

நெல்லை, நவ. 14: தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் சந்திரா (35). திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனநிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் பாத்திமா நகரில் வசித்து வரும் தனது அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கு அவர் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Advertising
Advertising

Related Stories: