தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இலவச தேர்வுகளுக்கு முன்பதிவு

தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஏழை மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பயிற்சி வகுப்புகளை முற்றிலும் இலவசமாக நடத்தி வருகிறது.

மாணவ, மாணவியருக்கு சிறந்த பயிற்றுனர்கள் மூலம் கடந்த 2வருடங்களாக இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளின் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழக அரசின் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியிடம் பெற்றுள்ளனர்.

 தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள வனகாப்பாளார் பணிக்கான 878 பணியிடங்களுக்கும், 300 வனவர் பணியிடங்களுக்குமாக மொத்தம் 1178 பணியிடங்களுக்கான போட்டி தேர்வு நடைபெறஉள்ளது. இத்தேர்வுகளை எதிர்கொள்ளும்  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் 17.11.2018 முதல் மாதிரி தேர்வுகள் கின்ஸ் அகாடமியில் நடக்கிறது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியார் கின்ஸ் அகாடமி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்த பயிற்சி மற்றும் தேர்வுகளுக்கு முன்பதிவு அவசியம் என அதன் இயக்குநர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: