கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி சுற்று வட்டார அனைத்து கிராமங்களிலும் பழுதான சாலைகளை சீரமைக்ககோரி மதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் மதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்.கணேசன் தலைமையில் நடந்தது. கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கரிசல்குளம் துரைராஜ், ஆலம்பட்டி கிளை செயலாளர் சாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைசெவல் கிளை செயலாளர் ராஜகுரு வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகாரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சிவகுமார் ஆகியோர் பேசினர். மந்தித்தோப்பு ராம்குமார் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குசாவடிகளிலும் அந்தந்த கிளை செயலாளர்களின் ஒத்துழைப்புடன் வரும் 25ம் தேதிக்குள் வாக்குசாவடி பணிக்குழு அமைத்திடவும், விவசாயிகளின் நலன்கருதி  விளைபொருட்களுக்கு அரசே விலையம் நிர்ணயித்து கொள்முதல் செய்திட வேண்டும், கோவில்பட்டி நகருக்கு வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன்கருதி  கூடுதல் பேரூந்துகளை இயக்க வேண்டும், கிராமப்புறங்களில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில கலைத்துறை துணை செயலாளர் பொன்ராம், மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் கேசவன் நாராயணன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரவணன், கோபாலபுரம் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சீனிவாசநகர் கிளை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி செய்திருந்தார்.

Related Stories: