தூத்துக்குடி மைய நூலகத்தில் நூலக வார விழா இன்று துவக்கம்

தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடி மாவட்ட மைய நூலக அலுவலர்  ராம்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 51வது தேசிய நூலக வார விழாவின் முதல் நிகழ்ச்சியாக தூத்துக்குடி, டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் இன்று (14ம்தேதி) காலை 11 மணிக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறும் புத்தக கண்காட்சியில் மதுரை கருவூலத் துறை கூடுதல் இயக்குநர் கணேசன் கலந்து கொண்டு பேசுகிறார். நாளை (15ம் தேதி) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் முதியோர்களின் இனிமையான மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் முதியோர்களுக்கான அனுபவ உரையாடல் நிகழ்ச்சியும், தியானப் பயிற்சியும் நடக்கிறது.

 நாளை மறுநாள் (16ம் தேதி) முற்பகல் 11 மணிக்கு 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுஅறிவு விநாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நவ.17ம் தேதி முற்பகல் 11 மணிக்கு போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி நடக்கிறது. நவ. 18ம் தேதி மாலை 3 மணிக்கு வாசிப்போம் நேசிப்போம் என்ற தலைப்பில் பார்வையற்றோருக்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வரும்  19ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மகளிருக்கான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தேசிய நூலக வார விழாவின் நிறைவு நிகழ்ச்சி நவ.20ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

Related Stories: