திட்டங்களை தெரிந்து கொள்வோம் வருமானமில்லாத முதியோருக்கு உதவித்தொகை, இலவச அரிசி

வருவாய்த்துறை சார்பில் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு நபர்க்கு இலவச வேட்டி/ சேலை வழங்கப்படும். நிபந்தனைகள்: 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டிருக்க வேண்டும். 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனம் இருக்க வேண்டும். 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்டக்குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்படும். முழுவதும் கண்பார்வையற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்துடன் புகைப்படம், குடும்ப அட்டை நகல், வருமானச்சான்று, இருப்பிடச்சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

Advertising
Advertising

தொடர்பு முகவரி: சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். மதிய உணவுத்திட்டத்தில் பங்கெடுக்கும் முதியோர்க்கு மாதம் 2 கிலோ இலவச அரிசி அல்லது மதிய உணவுத்திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்திற்கு 4கிலோ அரிசி வழங்கப்படும். நிபந்தனைகள்: உழைத்து வாழ இயலாதவராக இருக்க வேண்டும். வருமானம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். தொடர்புமுகவரி: தனி துணை ஆட்சியர் (மக்கள் குறைதீர்வு) கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: