பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளை

கும்பகோணம், நவ. 8:  கும்பகோணத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை  மாவட்டம் கும்பகோணம்  இளங்கா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலையரசி (53). புள்ளபூதங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருகிறார். இவர் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கியுள்ளார். அவரது வீட்டுக்கு மாதத்துக்கு 2 முறை சென்று வருவார்.அதன்படி  கடந்த 29ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில்  கடந்த 4ம் தேதி கலையரசியின் வீட்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து  கிடந்தது. இதையடுத்து கலையரசிக்கு அருகில் இருந்தவர்கள் தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து கலையரசி சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த  பீரோவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் இரண்டரை கிலோ ெவள்ளி பொருட்களை  மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 பவுன் நகை திருட்டு: கும்பகோணம்  இளங்கா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சையது அன்வர் (48). மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லைலாபானு,  பள்ளியில் படித்து வரும் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். தீபாவளி  பண்டிகைக்காக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 5ம் தேதி  திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது மகன்களுடன் லைலாபானு  சென்றார்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி லைலாபானு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து லைலாபானுவுக்கு அருகில் உள்ளவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து லைலாபானு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கத்ைத மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்  நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: