ரஷ்ய புரட்சி தின உறுதியேற்பு நிகழ்ச்சி

தஞ்சை, நவ. 8:  தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன் ரஷ்ய புரட்சியின் 101வது ஆண்டு புரட்சிதின உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர செயலாளர் குருசாமி, மகஇக இணை செயலாளர் காளியப்பன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தேவா, தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொது செயலாளர் அன்பழகன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், தாமரைச்செல்வன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாவுதீன், ஓய்வுபெற்ற சங்க பொது செயலாளர் அப்பாதுரை ஆகியோர் பேசினர். தஞ்சை பாலாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியூ சார்பில் ரஷ்ய புரட்சியின் 101வது ஆண்டு புரட்சிதின உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மில்லர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கொடியேற்றி வைத்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் விளக்க உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் அன்பு, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் மாவட்ட தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் பாலா, மாவட்ட துணைத்தலைவர் செங்குட்டுவன் பங்கேற்றனர்.

Related Stories: