×

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

திருப்புவனம், நவ.8: திருப்புவனம் அருகே ஏனாதியை சேர்ந்தவர் பொன்னம்பலம்(48). கட்டட தொழிலாளி. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.
   நேற்று முன்தினம் தீபாவளியன்று திருப்புவனம் பழையூரில் உள்ள விவசாய பம்ப் செட் கிணற்றில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவரின் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து மானாமதுரை தீயணைப்பு நிலைய மீட்புக் குழுவினர் உடலைமீட்டு விசாரித்த போது ஏனாதியை சேர்ந்த பொன்னம்பலம் என்பது தெரியவந்தது. நேற்று முந்தினம் வயல் வெளியில் திரிந்ததாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். கிணற்றுக்கு அருகே படுத்திருந்த பொன்னம்பலம் தவறி உள்ளே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...