×

மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, நவ. 8:சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தெரிவித்ததாவது, ‘சிவகங்கையில்
நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11மணி முதல் 1 மணி வரை சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளவும்’ என்று தெரிவித்தார்.

Tags : Electrification meeting ,
× RELATED மின் குறைதீர் கூட்டம்