×

குப்பை மேடான திருவள்ளுவர் மைதானம் : அப்புறப்படுத்த கோரிக்கை

கரூர், நவ. 8: கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்காக அமைக்கப்பட்ட தரைக்கடைகள் மூலம் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நலன்கருதி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு. இதில் பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் காடையை காலி செய்து விட்டு செல்லும்  போது வியாபாரிகள் பிளாஸ்டிக் பேப்பர்களை அங்கேயே விட்டு சென்றதால் மைதானம் முழுவதும் குப்பைகளாக சிதறிக்கிடக்கின்றனர். மேலும் மாநகர பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளும், கழிவுகளும் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குப்பைபோல பரவிக்கிடக்கிறது. இதனால், பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படு
வதாகவும் கூறப்படுகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் நகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த பட்டாசு கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.





Tags : Garbage Madras Thiruvalluvar Ground ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...