×

பைக் மோதி கொத்தனார் பலி

தோகைமலை, நவ.8: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அணியாப்பூரை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் (26). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக கன்னல்வடநாயக்கன்பட்டிக்கு பைக்கில் சென்றார். தெலுங்கப்பட்டி படுகளம் செல்லும் ரோட்டில் பூசாரிபட்டி என்ற இடத்தில் சென்றபோது,  கன்னல்வடநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (37) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் கனகராஜ் பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்து வருகின்றனர்.




Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு