×

மாஜி படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

கரூர், நவ.8:  சென்னையில் வரும் 14ம்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதுஎன்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள  செய்திக்குறிப்பு:முன்னாள் படைவீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் மற்றும் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டர் கன்வென்ஷன் சென்டரில் வரும் 14ம்தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் Dte Of Resettlement  மூலம் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் படைவீரர்கள் பங்கு கொள்ளலாம். இதில், பங்கு பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள்  www.dgrindia.com. www.triviz.com ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆன்லைனில் பதிவு செய்ய தவறியவர்கள் நேரடியாகவும் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குறைந்தபட்சம் 5 சுய விவர அடிப்படை குறிப்பு (பயோ டேட்டா) உடன்
கலந்து கொள்ளலாம். மேலும், இதில், கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரர்கள் அலுவல் சாரா உடைகளில் வரக்கூடாது. (Collar Less Shirts, Unformal dresses)  என டிஜிஆரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Employment Camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்