×

தற்காலிக தடுப்புச்சுவர் முழுமையாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கரூர், நவ. 8: கரூர் மாவட்டத்தின் அனைத்து முக்கிய அலுவலகங்களும் தாந்தோணிமலை பகுதியில் உள்ளன. மேலும், பெரும்பாலான குடியிருப்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. இதன் காரணமாக, அதிகளவு வாகன போக்குவரத்து இப்பகுதியில் உள்ளது. விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில், கரூர் சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வெங்ககல்பட்டி முதல் சுங்ககேட் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் வைக்கும் பணியும் நடைபெற்றது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இப்பணி நடைபெற்றது. சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் வைக்கப்படாமல், தாந்தோணிமலை மில்கேட் வரை மட்டுமே தடுப்புச் சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுங்ககேட்டில் இருந்து மில்கேட் வரை வரும் அனைத்து வாகனங்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மில்கேட் பகுதியில் இருந்து தங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. சுங்ககேட் மற்றும் வெங்ககல்பட்டியில் இருந்து மில்கேட் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மில்கேட் அருகே வரும்போது, அதிக வேகத்துடன் செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அச்சமும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள, மில்கேட்டில் இருந்து சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...