மதுரையில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது 336 பவுன் நகைகள் மீட்பு

மதுரை, நவ.8: மதுரையில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 336 பவுன் நகை, டூவீலர் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.மதுரையில் இரவு நேரங்களில் துணிகரமாக வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசாரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன்தேவாசீர்வாதம் நியமித்தார். ஆணை ஆணையர் ஜெயந்தியின் நேரடிப்பார்வையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

அப்போது சிசிடிவி பதிவை பார்வையிட்டத்தில் ஆனையூர் ஆபீசர்ஸ் டவுனைச் சேர்ந்த பஞ்சலிங்கம் மகன் சிவராசன்(41), வில்லாபுரம் ஹவுசிங்போர் காலனியை சேர்ந்த கைலாசம் என்ற குருசாமி மகன் ரவி என்ற புல்லட்ரவி(58) ஆகியோர் கூட்டாக இணைந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதில் சிவராசன் இலங்கை அகதியாவார்.

அவர்களிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் எஸ்.எஸ்.காலனி, கரிமேடு மற்றும் திடீர் நகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், 7 வழக்குகளில் தொடர்புடைய 336 பவுன் தங்க நகைகள், 3 செல்போன்கள் மற்றும் திருடுவற்கு பயன்படுத்திய டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நகரில் 5 இடங்களில்மீன்கடைகள் வைத்துள்ளேன்சிவராசன் பகீர் வாக்குமூலம்கைது செய்யப்பட்ட இலங்கை அகதியான சிவராசன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு: நான் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்தேன். தற்போது ஆனையூர் ஆபீசர் டவுன் 4வது தெருவில் வசித்து வருகிறேன். கடந்த 1999ம் ஆண்டு என் தம்பி திருமுருகன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடினேன். இதுதொடர்பாக 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நகரில் 5 இடங்களில் மீன் கடைகள் வைத்துள்ளேன். இந்த கடைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த திருட்டில் ஈடுபட்டேன். திருட்டு நகைகளை வாங்கி தொழில் செய்து வரும் புல்லட் ரவி என்பவருடன் சேர்ந்து, எஸ்எஸ் காலனி, கரிமேடு, சுப்பிரமணியபுரம் ஏரியாக்களில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டைத் தொடர்ந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: