காட்டாற்று வெள்ளம் தணிந்தது களக்காடு தலையணை 4 நாட்களுக்கு பின் திறப்பு

நெல்லை,நவ.8: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறி பாய்ந்து சென்றது.

இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 3ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். 4 நாட்களுக்கு பின்  வெள்ளம் தணிந்ததை அடுத்து நேற்று தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி களக்காடு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: