குறுக்குத்துறை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்

நெல்லை, நவ. 8:  நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று காலை யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 13ம் தேதி மாலையில் நடக்கிறது. 14ம் தேதி காலை அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன், ெதன்மண்டல மேலாளர் ராமசந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.தச்சநல்லூர் நெல்லை யப்பர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது. 13ம்தேதி சூரசம்ஹாரமும், 14ம்தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்துள்ளனா.

Related Stories: