கேதார கவுரி நோன்பு விரத வழிபாடு

திண்டிவனம், நவ. 8:திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் கேதார கவுரி விரத நோன்பு வழிபாடு நடந்தது.

தீபாவளி பண்டிகையில், அமாவாசை தினத்தில் பொதுமக்கள் கேதார கவுரி விரத நோன்பு இருப்பது வழக்கம். நேற்று காலை திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள அம்மச்சார் அம்மன் கோயிலில் கேதார கவுரி நோன்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. கிராமத்தை சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து பக்தியுடன் கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் நோன்பு கயிறு ஆகியவற்றை கலசத்தில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் வீட்டிற்கு கொண்டு சென்று பூஜையறையில் வைத்து வழிபட்டு நோன்பு கயிறுகளை கட்டிக் கொண்டனர். இது போல் மயிலம் மயிலியம்மன் கோயில் உட்பட கிராமத்தில் உள்ள அம்மன் கோயில்

களில் கேதார கவுரி விரத நோன்பு வழிபாடு நடந்தது.

Related Stories: