நீர்நிலைகளில் பாதுகாப்பாக மக்கள் குளிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குளிப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறு, குளங்கள், ஊரணிகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் குளம், கண்மாய்கள், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறுவர்கள், நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளில் குளிக்க செல்வதன் மூலம் பல்வேறு அசம்பாவிதமும் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது நேரடி மேற்பார்வையில் குழந்தைகளுடன் நீர் நிலைகளுக்கு குளிக்க செல்லும் போது முன்னெச்சரிக்கையுடனும் தேவையான பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிற இடங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பொது நீர் நிலைகளில் குளிக்கும் போதும் பயன்படுத்தும் போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.

 இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: