பட்டாசு வெடித்து தீக்காயம் : 24 பேருக்கு சிகிச்சை

கீழ்ப்பாக்கம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு தீவிரமான சிகிச்சையளிக்கும் வகையில், டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் 10 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கும்போது, காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த புகழேந்தி (10), சந்தீப் (4), ரங்கன் (59), ரமேஷ் (45), தீபக் (16), சேரன் (5), ஹரிணி (15), மாதவன் (32) ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் கை, கால் மற்றும் உடல் பாகங்களில் பலத்த தீக்காயங்களுடன் பால்ராஜ் (9), சாமுவேல் (7), அரவிந்த் (22), காமேஷ் (5), ஜீவா (7), வேம்பரசி (5), விக்னேஷ் ஆகிய 7 பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக பலத்த தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டவர்களுக்கு, தீக்காயம் சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: