திருக்காட்டுப்பள்ளியில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் அவலம்

திருக்காட்டுப்பள்ளி, நவ.2: திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 திருக்காட்டுப்பள்ளி கடைவீதி சுற்றுவட்டார பகுதி கிராம மக்களும் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் பகுதியாக உள்ளது. விவசாயிகள் விளைபொருட்கள் வாங்கவும், விற்கவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்ற பகுதியாகவும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கடைவீதி உள்ளது. செங்கரையூர்- பூண்டி பாலம் திறக்கப்பட்ட பிறகு திருச்சி மாவட்ட மக்கள் பயன்பாடும் அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளிக்கு புதிய சுற்றுசாலை அமைக்கப்படாததால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த கடை வீதி வழியாகத்தான் புதுக்கோட்டை, தஞ்சை, கல்லணை என அனைத்து இடங்களுக்கும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

 கொள்ளிடம் ஆற்றில் பெரிய ஆழ்குழாய் குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் தண்ணீர் குழாய்களில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டிலும், சாக்கடையிலும், ஆற்றிலும் கலந்து வீணாகிறது.

 தற்போது திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் லயன்கரை சாலை பிரியுமிடத்தின் அருகே சாலையின் அடியில் கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் ரோட்டில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு மிகவும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

உடைப்பு இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பலர் தடுமாறி விழுந்து விபத்துக்கள் நிகழ்கிறது. பேருந்துகளில் பயணம் செய்வோர் நிலை தடுமாறி மோதிக்கொள்கின்றனர்.

இது குறித்து அறந்தாங்கி கிராம குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலையை உடைத்து சீர்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி தர தாமதம் செய்வதால் சீர்படுத்த முடியாமல் உள்ளது என்றார்.

இதனை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முனீஸ்வரனிடம் கேட்டபோது முன்னதாக இதுபோல் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உடைப்பு ஏற்பட்டபோது சாலையை உடைத்து குழாயை சீர்படுத்தி கொண்டு சாலையை முழுமையாக சீர்படுத்தாமல் அரைகுறையாக விட்டு விட்டார்கள்.

இதனை நாங்கள் சீர்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதும் அது போல் விட்டுவிடக்கூடாது என்று சாலையை சீர்படுத்த தேவையான மணல், ஜல்லி, சிமிண்ட் உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் கொண்டுவந்து வைத்தால் தான் அனுமதி தரமுடியும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சாலையை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூறினார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி விரைவாக உடைப்பையும், தார் சாலையையும் சீர்படுத்த வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனை

தஞ்சை, நவ.2: தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு கார வகைகள் சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது. இதில் புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 கடந்த 70 வருடங்களுக்கு முன் குருதயாள் சர்மாவால் துவங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பேராதரவோடு வளர்ந்து தற்போது தஞ்சையில் 14 கிளைகளுடனும், பட்டுக்கோட்டையில் துவங்கப்பட்டு  செயல்பட்டு வருகிறது. தீபாவளியை இன்பம் பொங்கும் தீபாவளியாக கொண்டாட, வழக்கம்போல் தீபாவளி டிஸ்கவுண்ட் பேக், ஹேப்பி பேக், கால் கிலோ சந்திரகலா, மைசூர்பாகு, பாதுஷா, ஸ்பெஷல் லாடு உள்ள பேக் ரூ.75க்கும், தீபம் கேக் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் கிலோ ரூ.320க்கும், எலைட் பேக் ஸ்பெஷல் நெய் ஸ்வீட்ஸ், ஸ்பெஷல் சோமாசா, மைசூர்பாகு, பாதுஷா, அஜ்மீர் கேக், ஸ்பெஷல் பர்பி, மில்க் மைசூர் பாகு கொண்ட பேக் கிலோ ரூ.460, அரை கிலோ ரூ.230க்கும், கால் கிலோ ரூ.155க்கும், ராபல் கேக் ஸ்பெஷல் முந்திரி ஸ்வீட்ஸ் கிலோ ரூ.640க்கும், அரை கிலோ ரூ.420, கால் கிலோ ரூ.210க்கும் கிடைக்கும்.

 மேலும் வசந்தம் பேக் மில்க் ஸ்வீட்ஸ் கிலோ ரூ.380க்கும் கிடைக்கும். தனித்தனி பேக்குகளாக 1 கிலோ சந்திரகலா ரூ.320க்கும், ஸ்பெஷல் மில்க் பேடா ரூ.400க்கும், நைஸ்லாடு ரூ.440க்கும், கேசர்லாடு ரூ.460க்கும், கேரட் மைசூர்பாகு ரூ.460க்கும், ஸ்பெஷல் மைசூர்பாகு ரூ.480க்கும், முந்திரிபேடா ரூ.740க்கும், முந்திரி கத்லி ரூ.640க்கும், பாதாம்கத்லி ரூ.900க்கும் கிடைக்கும். அசார்டட் சுகர்லெஸ் ஸ்வீட்ஸ் அல்வா, குலோப்ஜாமுன் அரை கிலோ ரூ.230க்கும் கிடைக்கும்.

 இந்த வருட தீபாவளிக்கு ஸ்பெஷலாக முந்திரி, பிஸ்தா, பாதாம், ஸ்டாபெர்ரி, சாக்லேட், மேங்கோ, மாவா, ஆரஞ்ச், ரோஸ், ராயல் பைட்ஸ் பேக்குகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. முந்திரி ஸ்வீட்ஸ் வகைகளில் கட்டோரி, காஜு ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், காஜுபோட், மில்க்ஸ்வீட்ஸ் வகைகளில் ஐஸ்கிரிம் பர்பியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வழக்கம்போல் அனைத்து கார வகைகள் மற்றும் ட்ரை புரூட் பேக், அஞ்ஜீர் பர்பி வகைகளும் கிடைக்கும் என உரிமையாளர் சுப்பிரமணி சர்மா கூறினார்.

Related Stories: