திருக்காட்டுப்பள்ளியில் ரிங்ரோடு அமைக்க நிலம் எடுப்பு: இடம் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி, நவ.2: திருக்காட்டுப்பள்ளியில் ரிங்ரோடு அமைக்க நிலஎடுப்பு அட்டவணையிடப்பட்ட இடத்தை நேற்று  பூதலூர் தாசில்தார் இளங்கோ ஆய்வு செய்தார்.

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ரிங்ரோடு அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். திருக்காட்டுப்பள்ளி கடைவீதி வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் பூதலூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை, மானாமதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு கார், பைக், லாரி், டிராக்டர், டாரஸ் என அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நேரத்திற்கு சென்று வர முடியவில்லை. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி நகருக்குள் வராமல் பழமார்நேரி சாலையிலிருந்து பூதலூர் சாலைக்கும், அங்கிருந்து கண்டியூர் சாலைக்கும் ரிங்ரோடு அமைக்க அரசு உத்திரவிட்டதின் பேரில் நிலத்தை எடுக்க நிதி ஒதுக்கப்பட்டு அளவிட்டு செய்து கல் ஊன்றப்பட்டது. அதை தொடர்ந்து நில எடுப்பு அட்டவணைபடி யாருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் பூதலூர் தாசில்தார் இளங்கோ ஆய்வு செய்தார். அப்போது இதில் பாதிக்கப்படும் 16 வீடுகளுக்கு மாற்று இடத்தில் இடங்கள் வழங்கப்படும் என்றும், தென்னை, தேக்கு, பூவரசு மரங்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும், இந்த பணிகள் முடிந்தவுடன் சாலை அமைப்பதற்கான அனைத்து பணிகளும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் சுந்தரவல்லி, நிலஅளவர் சத்யபாமா, ஆர்ஐ பிரவீன், விஏஓக்கள் ராஜேஸ்வர்மா, தங்கமுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முனீஸ்வரன்,  சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: