சேலம் மத்திய சிறையில் கைதிகளின் பணம் ₹8.77 லட்சம் கையாடல்

சேலம், நவ.2: சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடைய கணக்கிற்கு உறவினர்கள் பணம் அனுப்புவார்கள். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கைதிகள், சிறை கேன்டீனில் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் கைதிகளுக்கான பணத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதே நேரத்தில் கைதிகளுக்கு மளிகை பொருட்கள் வாங்கிய கடைக்கு கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரிக்க சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டார்.இதையடுத்து சிறை கைதிகளுக்கான கணக்குகளை, தமிழக சிறைகளில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். 2016ம் ஆண்டு 10ம் மாதம் முதல் 2018ம்ஆண்டு 7வது மாதம் வரை  தணிக்கை செய்யப்பட்டது. இதில் ₹8,77,731 மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர், சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதில், சிறை உதவியாளர் வெற்றிவேல், திகள் பணம் ₹8.77 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ., ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஊழியர் மட்டும் கையாடல் செய்தாரா? அல்லது அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமா? என்பது விசாரணையில் தெரியவரும் என  போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: