×

கிருஷ்ணகிரி, ஓசூரில் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்

கிருஷ்ணகிரி, அக்.18:  ஆயுத பூஜை, விஜயதசமி விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படவுள்ளது. நேற்று மாலை கிருஷ்ணகிரி, ஓசூர் நகர பகுதியில் பூஜை பொருட்களின் விற்பனை தீவிரமாக நடந்தது. கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட்டில் சாமந்தி பூ, வாழைப்பழம், தேங்காய், சாம்பல் பூசணி, பொரி மற்றும் பூஜை பொருட்களை கிராம பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர். இதே போல் வாழை கன்றுகள் விற்பனையும் ஜோராக நடந்தது. சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தேங்காய், திருஷ்டி கழிப்பதற்கான சாம்பல் பூசணி, ஆரஞ்சு பழம், ஆப்பிள் பழம் போன்ற பழங்களும் விற்பனைக்காக சாலையோரங்களில் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தக விற்பனை நிலையங்கள், பேன்சி கடைகளில் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இன்றும், நாளையும் விற்பனை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ரோடு ரவுண்டானா, பெங்களூர் சாலை, தினசரி மார்க்கெட் சாலை, பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை மற்றும் பழையபேட்டை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அவற்றை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Krishnagiri ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு