×

மண்ணை நம்பி, மழையை நம்பி ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய பணிகள் ஜரூர்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.18: ஆர்.எஸ் மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைக்கு விவசாய பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. விவசாயிகள் களை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையால் விவசாயிகள் பணிகளை துவக்கினர். தற்போது ஓரளவு பயிர்கள் முளைத்து விட்டது. எனவே களையை கட்டுப்படுத்தும் விதமாக களைக் கொல்லி மருந்துகளை வாங்கி வயல்களில் அடித்து வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர பருவமழை இல்லாத காரணத்தால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் பல வகையிலும் நஷ்டத்தில் கஷ்டத்தில் இருந்தனர். இந்த ஆண்டு விவசாயத்தில் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் பயிரோடு களைகளும் சேர்ந்தே முளைத்து விடுகிறது. களைகளை கூலி ஆட்கள் கொண்டு அகற்றினால் கூடுதல் செலவு ஆகும். எனவே ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, பிச்சனா கோட்டை, பொட்டக் கேட்டை, புலவீர தேவன்கோட்டை, சன வேலி, ஆப்பிராய், கற்காத்தக் குடி, ஆவரேந்தல், பாரனூர், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, அரியான் கோட்டை, பனி திவயல் போன்ற ஊர்களில் விவசாயிகள் களையை கட்டுப்படுத்த களைக் கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர்’’ என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை