×

ரேஷன் ஊழியர்கள் 70 பேர் கைது

சிவகங்கை, அக். 18: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ரேசனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டலமுறை, ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகம் முன் திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாநில துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மாயாண்டி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட பொருளாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தினகரன், மாநில இணைச் செயலாளர் மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 70 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர். மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ration employees ,
× RELATED ரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் நிலுவை...