×

காலிமனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

மதுரை, அக்.18: காலிமனைகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற உத்தரவிட்டதுடன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மண்டலம் 2க்குட்பட்ட  வார்டு 30 தாசில்தார் நகர், குமரன் தெரு, வார்டு 28 மாட்டுத்தாவணி, டி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் கமிஷனர் அனீஷ்சேகர் ஆய்வு மேற்கொண்டார். குமரன் தெரு பகுதியில் ஒரு வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேவையில்லாத பழைய பொருட்களை உடன் அப்புறப்படுத்துமாறு கூறினார்.

மாட்டுத்தாவணி டி.எம்.நகர் பகுதியில் ஆய்வின்போது குடியிருப்போர் நலச் சங்கத்தினரிடம் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கூறினார். காலிமனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி