மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இரை தேடி கூட்டமாக தரை இறங்கும் மயில்கள்

செம்பட்டி, அக். 18:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மணலூர், தடியன்குடிசை, ஆடலூர், பன்றிமலை மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மயில்கள் உள்ளன. தற்போது மலைப் பகுதிகளில் மயில்களுக்கான இரை  இல்லாததால், மயில்கள் கூட்டம், கூட்டமாக அய்யம்பாளையம் மருதாநதி, சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க பகுதிக்கு வருகின்றன.

தற்போது மயில்கள் கூட்டம், கூட்டமாக மலைப் பகுதிகளில் இருந்து தரைப் பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சித்தரேவு, நெல்லூர், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் முகாமிட்டுள்ளனர்.

சித்தரேவு பகுதிகளில் தெருக்களில் இரையை தேடுகின்றன. மயில்கள் கூட்டம், கூட்டமாக தரைப் பகுதிகளில் இருப்பதை தெரிந்து கொண்ட வேட்டையாடிகள் ஒரு சிலர் மயில்களை வேட்டையாடுவதாக கூறப்படுகிறது. இதனால் மணலூர், பெரும்பாறை செல்லும் வழியில் மயில்களை வேட்டையாட கார்களில் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் தேசிய பறவையான மயில்களை வேட்டையாடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: