திண்டுக்கல் அருகே பரபரப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல், அக். 18: நகர் சரக பள்ளிக்கல்வித்துறை சார்பாக திண்டுக்கல் நகரில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பிளாஸ்டிக் உபயோகித்தால் ஏற்படும் விளைவுகளையும், தற்போது பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து எப்படி எதிர்கொள்வது என்று எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணி, திண்டுக்கல் புனித செசிலியா நடுநிலைப்பள்ளியில் தொடங்கி,

புனித மரியன்னை தொடக்கப்பள்ளி வரையில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் சென்றனர். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நகர் போலீஸ் டிஎஸ்பி (பொ) ஜஸ்டின் பிரபாகரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: