×

முல்லை ₹1000, மல்லி ₹1250

தோவாளையில் பூக்கள் விலை உயர்வு
ஆரல்வாய்மொழி, அக். 18: ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்தது.குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கும் பூக்கள் விற்பனை ஆகின்றன. இதுதவிர வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பூக்களை வாங்கி செல்கின்றனர். கேரளாவை உலுக்கிய கோர மழையால் இந்த மார்க்கெட்டில் ஓணப்பண்டிகையை தொடர்ந்து பூக்கள் விலை குறைவாகவே இருந்து வந்தது.இந்நிலையில், ஆயுதப்பூஜையை யொட்டி நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்கள் விலை நிலவரம் (ஒரு கிலோ): மல்லி ₹1250, பிச்சி ₹1000, முல்லை ₹1000, வாடாமல்லி ₹150, சம்பங்கி ₹350, கனகாம்பரம் ₹400, பாக்கெட் ரோஸ் ₹50, பட்டன்ரோஸ் ₹170 (பாக்கெட்), கொழுந்து ₹100, மரிக்கொழுந்து ₹120, மஞ்சள் கிரேந்தி ₹120, ஆரஞ்சு கிரேந்தி ₹120, மஞ்சள் செவ்வந்தி ₹200, வெள்ளை செவ்வந்தி ₹200, துளசி ₹50, கோழிப்பூ ₹50, தாமரை ₹20 (ஒன்று) என விற்பனையானது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:ஓணப்பண்டிகையை தொடர்ந்து பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. தற்போது ஆயுதப்பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை குறையாது என்றார். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Malli ,
× RELATED மயானத்தில் வெளியான அஞ்சலி பட டீசர்