டாஸ்மாக் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக். 17: தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணை தொகை வழங்கிட வேண்டும். நிலையாணைகள் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது பணியிட மாறுதல், இளநிலை உதவியாளர் தேர்வில் டாஸ்மாக் இயக்குநர் குழு முடிவுகளை அமல்படுத்த வேண்டும்.

என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், கணபதி, சிங்காரவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் பழனிவேல், சந்தானகுமார், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: