அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டெங்கு சிறப்பு பிரிவில் எம்எல்ஏ ஆய்வு

‘விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு பிரிவை நேற்று பொன்முடி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், காய்ச்சல் பிரிவில் 35க்கும் மேற்பட்டோர் ஜூரம் என்ற காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நிரப்பப்பட வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.

இதனை சரிசெய்து மருத்துவர்களுக்கு தேவையான வசதியையும் செய்து தரவேண்டும். அப்போதுதான் நோயாளிகளை எந்த வித இடையூறுமின்றி கவனிக்கமுடியும். சுகாதார துறை டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு இருக்கையில் டெங்கு காய்ச்சலை எவ்வாறு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். திமுக நிர்வாகிகள் ஜனகராஜ், ஜெயச்சந்திரன், நயினாமுகமது, ஜெயபால், ரவிதுரை, அப்துல்சலாம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: