×

எம்ஆர்கே சர்க்கரை ஆலை தலைவர் தேர்வு

சேத்தியாத்தோப்பு, அக். 17:  சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குனர் தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், அதிமுக, திமுக நிர்வாகிகள், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் 17 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவிக்கு நேற்று தேர்வு நடந்தது. தேர்தல் அதிகாரி சார்பதிவாளர் பாலசுப்ரமணியின் தலைமையில் ஆலையின் ஆட்சியர் மணிமேகலை முன்னிலையில்  தலைவர், துணைத்தலைவர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தலைவராக கானூர் பாலசுந்தரம், துணைத்தலைவராக வினாயகமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : MRK Sugar Mill ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி